கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,800 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வேப்பனப்பள்ளியில், கலெக்டர் நேரில் ஆய்வு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,800 மையங்களில்   கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்  வேப்பனப்பள்ளியில், கலெக்டர் நேரில் ஆய்வு
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,800 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. வேப்பனப்பள்ளியில் நடந்த முகாமை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,800 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. வேப்பனப்பள்ளியில் நடந்த முகாமை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.

கொரோனா தடுப்பூசி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 30-வது கட்டமாக 1,800 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடந்தது. வேப்பனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி, அரசு மருத்துவமனை மையங்கள், இ.எஸ்.ஐ. மருத்துவமனை மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் என மொத்தம் 1,800 மையங்களில் 30-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது. மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள், 2-வது தவணை போட வேண்டியவர்கள் பயனடையும் வகையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

தடுப்பூசிகள் இருப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவிஷீல்டு, கோவேக்சின், கார்பிவேக்ஸ் தடுப்பூசிகள் என மொத்தம் 3 லட்சத்து 27 ஆயிரத்து 900 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதின் மூலம் தீவிர நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம்.

மேலும் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முககவசம் அணியவேண்டும் எனவே, இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், வட்டார மருத்துவ அலுவலர் சரவணன், மாவட்ட திட்ட அலுவலர் திருலோகன், மாவட்ட பயிற்சிகுழு மருத்துவ அலுவலர் விமல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசமூர்த்தி, ஹேமலதா மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story