நாமக்கல் மாவட்டத்தில், ஒரே நாளில் 56,961 பேருக்கு கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில், ஒரே நாளில்  56,961 பேருக்கு கொரோனா தடுப்பூசி  சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
x

நாமக்கல் மாவட்டத்தில், ஒரே நாளில் 56,961 பேருக்கு கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 15 லட்சத்து 15 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி 12 லட்சத்து 84 ஆயிரத்து 824 நபர்களுக்கும், 2-ம் தவணை தடுப்பூசி 10 லட்சத்து 26 ஆயிரத்து 242 நபர்களுக்கும் போடப்பட்டு உள்ளது. குறிப்பாக இதுவரை நடைபெற்ற 30 மாபெரும் தடுப்பூசி முகாம்களில் மட்டும் 8 லட்சத்து 36 ஆயிரத்து 522 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்று உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று 31-வது கட்டமாக அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 2,766 முகாம்கள் மூலமாக காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இப்பணியில் 210 டாக்டர்கள். 430 செவிலியர்கள் உள்பட சுமார் 5 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் நடந்த சிறப்பு முகாமில் 56,961 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story