1,934 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்


1,934 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
x

தர்மபுரி மாவட்டத்தில், இன்று 1,934 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது.

தர்மபுரி

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு 1,934 இடங்களில் 35-வது தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் அருகில் உள்ள அரசு சுகாதார மையங்களுக்கு சென்று தவறாது பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் வருவோருக்கு அரசு உத்தரவுப்படி தலா ரூ.500 அபராதம் விதிக்கப்படும். கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த சோதனை முடிவு வரும் வரை தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story