புதன்கிழமைதோறும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்
சிவகங்கை மாவட்டத்தில் புதன்கிழமைதோறும் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் புதன்கிழமைதோறும் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்சிவகங்கை மாவட்டத்தில் புதன்கிழமைதோறும் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்..
தடுப்பூசி முகாம்
கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு தடுப்பூசி முகாம் சுகாதார துறையின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று சிவகங்கை மாவட்டத்தில் 300 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பூவந்தியில் நடைபெற்ற முகாமை கலெக்டர் மதுசூதன் ரெட்டி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் விஜய் சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:- கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த நடத்தப்படும் சிறப்பு தடுப்பூசி முகாம் மாவட்டத்தில் 300 இடங்களில் நடைபெறுகிறது.
புதன்கிழமைதோறும்
அரசின் உத்தரவின் படி சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 37 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாமில் இதுவரை 12 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 106 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் இனி வாரம்தோறும் புதன்கிழமை அன்று மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே இதுவரை தடுப்பூ சி செலுத்தாத பொதுமக்கள் புதன்கிழமை அன்று தங்கள் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.