ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்


ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
x

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.

ஈரோடு

தமிழகத்தில் கொரோனா 4-வது அலை பரவுவதை தடுக்கும் வகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மையங்களில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதில் 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை, 2-வது தவணை தடுப்பூசிகளும், ஏற்கனவே 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட முன்கள பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் இலவசமாக செலுத்தப்படுகிறது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள், பள்ளிக்கூடங்கள் உள்பட மொத்தம் 3 ஆயிரத்து 194 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதில் 1 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட உள்ளது. இந்த முகாமில் 4 ஆயிரத்து 260 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். மிக வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் தயக்கமின்றி வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story