சேலம் மாவட்டத்தில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு


சேலம் மாவட்டத்தில்  ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு
x

சேலம் மாவட்டத்தில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகி இருந்தது.

சேலம்

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று புதிதாக 9 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் ஒருவருக்கும், சங்ககிரியில் ஒருவருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுதவிர, சேலம் மாவட்டத்திற்கு நாமக்கல், சென்னை, ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த தலா 2 பேரும், தர்மபுரியில் இருந்து வந்த ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு 3-வது கட்டமாக பரவ தொடங்கிய நிலையில் சேலம் மாவட்டத்தில் தற்போது அதன் தாக்கம் ஒற்றை இலக்கமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story