ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று


ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று இல்லாமல் இருந்து வந்தது. தமிழகத்தில் தற்போது வேகமாக தொற்று பரவி வரும் நிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிப்புளி பகுதியை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மீண்டும் தொற்று பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story