மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கோயம்புத்தூர்


கணபதி

கோவை மாநகராட்சி தங்களை நிரந்தர பணியாளர்களாக உறுதி செய்ய வேண்டும். கொசு ஒழிப்பு, தூய்மை பணி மேற்கொள்ளும் வாகன ஓட்டுனர்கள், கிளீனர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

துப்புரவு பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்த பட்சமாக ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும். ஊதியத்தை நேரடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி

கடந்த 13 ஆண்டுக ளாக ஒப்பந்த அடிப்படை யில் பணிபுரியும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று காலை கணபதி சத்திரோடு அண்ணாநகர் கார்னரில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

இதில், கோவை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நல குழு சார்பாக சுமார் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story