பேனர் வைத்ததில் ஊழல்: "என்னிடம் ஆதாரங்கள் இருக்கு" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


பேனர் வைத்ததில் ஊழல்: என்னிடம் ஆதாரங்கள் இருக்கு - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x

டிடிவி, சசிகலா, ஓபிஎஸ்-க்கு அதிமுகவில் இடமில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை பட்டினப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

நம்ம ஊரு சூப்பர்' இயக்க விளம்பர பேனர் ஒன்றுக்கு ரூ.7,906 செலவில் அச்சடிக்க வேண்டும் என வட்டார அலுவலர் அனுப்பிய சுற்றறிக்கை ஆதராத்துடன் உள்ளது. தஞ்சாவூரில் 1 விளம்பர பேனர் 6,700 ரூபாய்க்கு அச்சடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஜிஎஸ்டி வரி ரூ.603 சேர்த்து மொத்தம் ரூ.7,906 செலவிடப்பட்டுள்ளது. ஆதாரம் உள்ளது

பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் படி கட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். டிடிவி,சசிகலா,ஓபிஎஸ்-க்கு எந்த நிலையிலும் இடமில்லை.

திமுகவின் ஊது குழலாக ஓ.பி.எஸ் செயல்படுகிறார். அவரை எப்படி கட்சியில் சேர்க்க முடியும்?

பாஜக எங்கள் கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டார்கள். அதை அவர்களும் விரும்பவில்லை. பாஜகவுடன் எங்களுக்கு சுமூக உறவு உள்ளது. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுக்கும் அசைக்க முடியாத சக்தியாக அதிமுக செயல்படுகிறது. கவர்னரை சந்திக்கும் போது அரசியல் பேசவில்லை என்றார்.


Next Story