ரூ.1¾ கோடிக்கு பருத்தி ஏலம்


ரூ.1¾ கோடிக்கு பருத்தி ஏலம்
x

ரூ.1¾ கோடிக்கு பருத்தி ஏலம்

திருப்பூர்

மூலனூர்

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்திவிற்பனை நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 726 பேர் பருத்தி கொண்டு வந்திருந்தனர். பருத்தியியை திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் கொள்முதல் செய்தனர். வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ரூ.7,789-ற்கும், குறைந்தபட்சவிலை ரூ.6650-ற்கும் விற்பனையானது. அதன்படி மொத்தம் ரூ. 1 கோடியே 75 லட்சத்து 99 ஆயிரத்து 475- க்கு விற்பனை செய்யப்பட்டது.

------------------


Next Story