தொடர் மழைக்கு குடிசை சேதம்


தொடர் மழைக்கு குடிசை சேதம்
x

தொடர் மழைக்கு குடிசை சேதம் ஆனது.

கரூர்

குளித்தலை பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை சிறிது நேரம் மழை பெய்தது. பின்னர் சிறிது நேரம் வெயில் அடித்தது. இதன் பின்னர் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த தொடர் மழையின் காரணமாக குளித்தலை அருகே உள்ள எழுநூற்றுமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது குடிசை வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இது குறித்த தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டு அரசு சார்பில் அவருக்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகை கொடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டனர்.

1 More update

Next Story