குடிசை தீப்பற்றி வாகனங்கள், பொருட்கள் எரிந்தன
கே.வி.குப்பம் அருகே குடிசை தீப்பற்றியதில் வாகனங்கள், பொருட்கள் எரிந்தன.
வேலூர்
கே.வி.குப்பத்தை அடுத்த வடுகந்தாங்கல் ஆண்டாள் ஏரி பகுதியில் நரிக்குறவர்கள் வசிக்கின்றனர். இங்கு ஒரு குடிசையில் ரமேஷ் என்பவர் மனைவி சசிகலா மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நேற்று அடுப்பில் சமையல் செய்து விட்டு அவர்கள் வெளியில் சென்றனர். அப்போது குடிசையில் பற்றிய தீ மளமள என எரிந்தது. அங்கு இருந்தவர்கள் தீயை அணைத்தனர். இதில் குடிசை வீடு முற்றிலும் தீப்பற்றி எரிந்து போனது.
குடிசையில் இருந்த மொபட், சைக்கிள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, அரிசி, பருப்பு ஆகியவை தீயில் எரிந்து கருகியது. தகவல் அறிந்த கே.வி.குப்பம் தாசில்தார் அ.கீதா, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ரமேஷ் குடும்பத்துக்கு அரிசி, பருப்பு, வேட்டி, சேலை ஆகிய நிவாரண பொருட்களை வழங்கினார்.
அப்போது வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் சேகுவாரா உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story