கோத்தலூத்து கிராமத்தில் கனமழைக்கு தொகுப்பு வீடுகள் சேதம்


கோத்தலூத்து கிராமத்தில் கனமழைக்கு தொகுப்பு வீடுகள் சேதம்
x

ஆண்டிப்பட்டி அருகே உள்ள கோத்தலூத்து கிராமத்தில் கனமழை காரணமாக தொகுப்பு வீடுகள் சேதம் அடைந்தன.

தேனி

ஆண்டிப்பட்டி அருகே உள்ள கோத்தலூத்து கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் அரசு தொகுப்பு வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழைக்கு தொகுப்பு வீடுகள் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அங்கு மிகுந்த அச்சத்துடன் வசித்து வந்தனர். இந்த வீடுகளை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து அந்த வீடுகளில் குடியிருந்த மக்களை கோத்தலூத்து ஊராட்சி நிர்வாகத்தினர் அதே ஊரில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்துள்ளனர். மழை தொடர்வதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளுக்குள் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். சேதமடைந்த தொகுப்பு வீடுகளை இடித்து அகற்றி விட்டு தங்களுக்கு புதிய வீடுகளை கட்டி தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றாத பட்சத்தில் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.


Next Story