நாமக்கல்லில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம்
நாமக்கல்:
நாமக்கல்லில் நேற்று 5 ஆயிரம் மூட்டை பருத்தி சுமார் ரூ.1½ கோடிக்கு ஏலம் போனது.
பருத்தி ஏலம்
நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது.
இந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 5 ஆயிரம் மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.
ரூ.1½ கோடிக்கு விற்பனை
ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 369 முதல் ரூ.8 ஆயிரத்து 635 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 299 முதல் ரூ.7 ஆயிரத்து 200 வரையிலும் ஏலம் போனது. சுரபி ரக பருத்தி நேற்று ஏலத்திற்கு கொண்டு வரப்படவில்லை. பருத்தி மூட்டைகள் ரூ.1½ கோடிக்கு விற்பனையானது.
இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர்.