ராசிபுரத்தில் ரூ.17 லட்சத்துக்கு பருத்தி ஏலம்


ராசிபுரத்தில் ரூ.17 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு 802 மூட்டை பருத்தியை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 199 முதல் ரூ.8 ஆயிரத்து 209 வரையும், டி.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 219 முதல் ரூ.7 ஆயிரத்து 813 வரையும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.4 ஆயிரத்து 600 முதல் ரூ.5 ஆயிரத்து 370 வரையும் ஏலம் போனது. மொத்தம் ரூ.17 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.


Next Story