பருத்தி, பட்டு கைத்தறி நெசவாளர் சங்க கூட்டம்


பருத்தி, பட்டு கைத்தறி நெசவாளர் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2023 8:45 PM GMT (Updated: 26 Oct 2023 8:45 PM GMT)

குள்ளக்காபாளையத்தில் பருத்தி, பட்டு கைத்தறி நெசவாளர் சங்க கூட்டம் நடைபெற்றது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி அருகே குள்ளக்காபாளையத்தில் அறிஞர் அண்ணா பருத்தி, பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் உள்ளது. இதில் 160 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவில்லை. மேலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று சங்க மகா சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கூட்டுறவு செயலாட்சியரான சத்தியசீலன் தலைமை தாங்கினார். அப்போது அங்கு வந்த முன்னாள் சங்க தலைவர் மனோகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் புதிய உறுப்பினர்களை சேர்க்கக்கூடாது என்று கூறினர். அதற்கு தி.மு.க.வின் நெசவாளர் அணியை சேர்ந்த நாகராஜ் என்பவர், தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றார்.

பின்னர் செயலாட்சியரான சத்தியசீலன் பேசும்போது, தேர்தல் ஆணைய உத்தரவுப்படி மகா சபை கூட்டம் நடத்தப்படுகிறது. அதன் வழிகாட்டுதல்களை மட்டுமே தீர்மானமாக நிறைவேற்ற முடியும். புதிய உறுப்பினர் சேர்க்கையில் ஆட்சேபணை இருந்தால் கடிதம் மூலம் பதிவாளர்களுக்கு அனுப்பி வைக்கலாம் என்றார்.

இதையடுத்து 109 பேர் புதிய உறுப்பினர்களாக சேர்ப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story