ரூ.46½ லட்சத்துக்கு பருத்தி ஏலம்


ரூ.46½ லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x

கொளத்தூரில் ரூ.46½ லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

சேலம்

கொளத்தூர்

கொளத்தூர் வட்டாரத்தில் சேத்துகுளி, கோவிந்தபாடி உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு அறுவடை செய்யப்படும் பருத்தி கொளத்தூரில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். இதனை பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்கிறார்கள். இந்த நிலையில் நேற்று கொளத்தூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு 1,093 பருத்தி மூட்டைகள் ஏலத்துக்கு வந்தன. இதில் ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனையானது. இதன் மூலம் மொத்தம் ரூ.46 லட்சத்து 59 ஆயிரத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போனது.


Next Story