ரூ.53 லட்சத்துக்கு பருத்தி கொள்முதல்


ரூ.53 லட்சத்துக்கு பருத்தி கொள்முதல்
x
தினத்தந்தி 13 Oct 2022 1:04 AM IST (Updated: 13 Oct 2022 1:48 AM IST)
t-max-icont-min-icon

ரூ.53 லட்சத்துக்கு பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று காலை பருத்தி ஏலம் நடந்தது. இதில் கும்பகோணம் மட்டுமல்லாது பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 693 குவிண்டால் பருத்தியை கொண்டு வந்தனர். இதையடுத்து விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலையில் ஏலம் நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 9 வியாபாரிகள் விவசாயிகள் கொண்டு வந்த 721 லாட் பருத்தியை பார்வையிட்டனர். இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.10 ஆயிரத்து 345-க்கு பருத்தி ஏலம் போனது. குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 809-க்கும், சராசரியாக ரூ.7 ஆயிரத்து 709-க்கும் பருத்தி விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஏலம் மூலமாக மொத்தம் 693 குவிண்டால் பருத்தியை ரூ.53 லட்சத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டது.


Next Story