கொங்கணாபுரத்தில் ரூ.35 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
கொங்கணாபுரத்தில் ரூ.35 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
சேலம்
எடப்பாடி:
கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த சுமார் 1,290 பருத்தி மூட்டைகள் 330 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு, கூட்டுறவு துறை அலுவலர்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. இதில் பி.டி.ரக பருத்தி குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 279 முதல் ரூ.9 ஆயிரத்து 599 வரையும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ரூ.3 ஆயிரத்து 129 முதல ரூ.5 ஆயிரம் 969 வரையும் விற்பனையானது. 1,290 பருத்தி மூட்டைகள் ரூ.35 லட்சத்துக்கு ஏலம் போனது.
Related Tags :
Next Story