ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம்


ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 3 July 2023 12:15 AM IST (Updated: 3 July 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 1 ½ கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

மயிலாடுதுறை

பொறையாறு:

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 1 ½ கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

பருத்தி ஏலம்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின்படி இ-நாம் மூலம் மறைமுக ஏலம் நடந்து வருகிறது. தற்போது செம்பனார்கோவில் பகுதியில் விவசாயிகள் பருத்தி அறுவடை செய்து வருகின்றனர்.

இதனால் விவசாயிகளின் நலன் கருதி செம்பனார்கோவிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள விற்பனை குழு மூலம் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் கீழ் இ-நாம் முறையில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது.

ரூ. 1½ கோடிக்கு ஏலம்

இந்த பருத்தி ஏலத்தில் ஒரு குவிண்டால் அதிகபட்ச விலையாக ரூ.6ஆயிரத்து 779-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.5ஆயிரத்து 845-க்கும் சராசரி விலையாக ரூ.6ஆயிரத்து 345-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக சுமார் 2 ஆயிரத்து 200 குவிண்டால் பருத்தி ரூ.1 கோடியே 65 லட்சத்துக்கு ஏலம் போனது.

இந்த ஏலத்தில் 586 விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை தேனி, கோவை, கொங்கணாபுரம், பெரம்பலூர், விழுப்புரம், திருப்பூர், கும்பகோணம் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த 18 வியாபாரிகள் மற்றும் மில் அதிபர்கள் கொள்முதல் செய்தனர். கொள்முதல் செய்த பருத்தியை லாரிகள் மூலம் எடுத்து சென்றனர்.


Next Story