ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம்


ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம்
x

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம் போனது

தஞ்சாவூர்

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமையிலும், மேற்பார்வையாளர் அன்பழகன் முன்னிலையிலும் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மொத்தம் 1,369 லாட் பருத்தி பஞ்சுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. கும்பகோணம், பண்ருட்டி, திருப்பூர், தேனி, விழுப்புரம், செம்பனார்கோவில் மற்றும் ஆந்திராவை சேர்ந்த 11 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இந்த மறைமுக ஏலத்தில் மொத்தம் ரூ.2 கோடியே 19 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.




1 More update

Next Story