ரூ.25 ½ லட்சத்துக்கு பருத்தி ஏலம்
சோழம்பேட்டை திறந்தவெளி கிடங்கில் ரூ.25 ½ லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது
மயிலாடுதுறை
மயிலாடுதுறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் உள்ள திறந்தவெளி கி்டங்கில் விவசாயிகளிடம் இருந்து பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர். இந்த ஏலத்தினை மயிலாடுதுறை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள விநாயகமூர்த்தி அறிவுறுத்தலின் பேரில் கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குனர் மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் மேற்கொண்டனர். இந்த ஏலத்தில் ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.7 ஆயிரத்து 69- க்கும், அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 369-க்கும், சராசரி விலையாக ரூ.7ஆயிரத்து 219-க்கும் என 354 குவிண்டால் பருத்தி ரூ.25 லட்சத்து 55 ஆயிரத்துக்கு விடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story