ரூ.3¼ கோடிக்கு பருத்தி ஏலம்


ரூ.3¼ கோடிக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 12 Feb 2023 1:00 AM IST (Updated: 12 Feb 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

எடப்பாடி:-

கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஏலத்துக்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த சுமார் 12 ஆயிரம் பருத்தி மூட்டைகள் 2 ஆயிரத்து 300 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு, கூட்டுறவு அலுவலர்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 400 முதல் ரூ.8 ஆயிரத்து 350 வரையிலும், டி.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 900 முதல் ரூ.8 ஆயிரத்து 750 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ரூ.4 ஆயிரத்து 700 முதல் ரூ.6 ஆயிரத்து 350 வரையிலும் விற்பனையானது. பருத்தி மூட்டைகள் அனைத்தும் மொத்தம் ரூ.3 கோடியே 25 லட்சத்துக்கு ஏலம் போனதாக கூட்டுறவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

1 More update

Related Tags :
Next Story