ரூ.54 லட்சத்துக்கு பருத்தி ஏலம்


ரூ.54 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 11 Feb 2023 1:00 AM IST (Updated: 11 Feb 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

கொளத்தூர்:-

கொளத்தூரில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. விவசாயிகள் பி.டி.ரக பருத்திகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். மொத்தம் 1,811 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. ஒரு கிலோ பருத்தி ரூ.73-க்கு விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் ரூ.54 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்ததாக விற்பனை கூட அலுவலர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story