சத்தி கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ரூ.1¼ கோடிக்கு ஏலம்


சத்தி கூட்டுறவு சங்கத்தில்  பருத்தி ரூ.1¼ கோடிக்கு ஏலம்
x

சத்தி கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ரூ.1¼ கோடிக்கு ஏலம் போனது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் கோபி ரோட்டில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதற்கு சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம், அரசூர், பெரியகுளம், கே.என்.பாளையம், ராஜன் நகர், புதுப்பீர்கடவு, கொத்தமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் 4 ஆயிரத்து 27 மூட்டைகள் கொண்டு வந்திருந்தார்கள். பருத்தி (குவிண்டால்) ரூ.8 ஆயிரத்து 249 முதல் ரூ.9 ஆயிரத்து 599 வரை என மொத்தம் ரூ.1 கோடியே 23 லட்சத்து 41 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்பட்டது. சத்தியமங்கலம், கோபி, திருப்பூர், அவினாசி, கோவை ஆகிய ஊர்களில் இருந்து வியாபாரிகள் வந்து ஏலம் எடுத்தார்கள்.


Next Story