கொங்கணாபுரத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம்


கொங்கணாபுரத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம்
x

கொங்கணாபுரத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம் நடந்தது.

சேலம்

எடப்பாடி:

கொங்கணாபுரத்தில் இயங்கி வரும் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் 4,800 மூட்டைகள் 900 லாட்டுகளாக வைக்கப்பட்டு இருந்தன. அவைகள் ரூ.2 கோடிக்கு ஏலம் போனது. இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு (100 கிேலா) ரூ.10 ஆயிரத்து 450 முதல் அதிகபட்சமாக ரூ.11 ஆயிரத்து 999 வரையும், டி.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரத்து 900 முதல் ரூ.11 ஆயிரத்து 299 வரை ஏலம் போனது.


Next Story