பருத்தி பயிரில் வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்


பருத்தி பயிரில் வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
x

பருத்தி பயிரில் வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

திருவாரூர்

பருத்தி பயிரில் வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

வாடல் நோய்

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் விஞ்ஞானிகளான திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், உதவி பேராசிரியர்கள் பெரியார் ராமசாமி, கமலசுந்தரி ஆகியோர் பருத்தியில் வாடல் நோய் தாக்குதல் காணப்பட்ட வயல்களை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து வேளாண் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வாடல்நோய் தாக்கப்பட்ட பருத்தி செடிகளின் இலைகள் மஞ்சள் நிறமாகவும், பிறகு பழுப்பாகவும் மாறும். இலைக்காம்புகளின் மீதும் பழுப்பு நிற வளையத்தை காணமுடியும்.

இலைகள் உதிர்ந்து விடும்

வளர்ந்த செடிகளில் இதுபோன்ற நோய் தாக்கத்தினால் அடிப்பாகத்தில் உள்ள முதிர்ந்த இலைகள் அனைத்தும் தொடக்கத்தில் மஞ்சள் நிறமாக மாறி பிறகு வாடி உதிர்ந்து விடும்.

தாக்கப்பட்ட பருத்தி செடிகள் காய்ந்து வருவதை காண முடியும். மேலும் வாடல் நோய் தாக்கப்பட்ட தண்டின் அடிப்பகுதியில் கருமையாகவும், அவற்றை உரித்து பார்த்தால் கருப்பு அல்லது பழுப்பு நிற கோடுகள் இருப்பதை காண முடியும். தாக்கப்பட்ட வயல்களில் இருந்து அடுத்த வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை தவிர்க்க வேண்டும்.

மண் மூலம் பரவும்

ஏனென்றால், இந்த வாடல்நோய் மண் மூலம் பரவக்கூடியது. பொட்டாசியம் உரத்தை செடிகளுக்கு அதிகமாக கொடுக்க வேண்டும். செயற்கை பூஞ்சாணக்கொல்லியான கார்பன்டாசிம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் என்ற அளவில் கலந்து தாக்கப்பட்ட செடிகளின் தூர்கள் நனையும்படி மண்ணில் ஊற்ற வேண்டும்.

மேலும் அருகாமையில் உள்ள செடிகளுக்கும் இந்த செயற்கை பூஞ்சாணக் கொல்லியை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆய்வின்போது வேளாண் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story