பருத்தி பயிரில் களை வெட்டும் பணிகள் மும்முரம்


பருத்தி பயிரில் களை வெட்டும் பணிகள் மும்முரம்
x
தினத்தந்தி 7 March 2023 7:00 PM GMT (Updated: 7 March 2023 7:01 PM GMT)

நன்னிலம் பகுதியில் பருத்தி பயிரில் களை வெட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

திருவாரூர்

நன்னிலம் பகுதியில் பருத்தி பயிரில் களை வெட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

நெல் சாகுபடி

நெற்களஞ்சியமான திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சம்பா, தாளடி, குறுவை என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு (2022) மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டது. இதன் காரணமாக காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி பரப்பு அதிகரித்தது. அதைத்தொடர்ந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பும் அதிகரித்தது.

மழையால் மகசூல் இழப்பு ஏற்பட்ட நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா, தாளடி நெல் அறுவடை பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

பருத்தி சாகுபடி

நெல் சாகுபடியை தொடர்ந்து பயறு, உளுந்து சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகிறார்கள். பெரும்பாலான விவசாயிகள் பணப்பயிரான பருத்தி சாகுபடியை செய்து உள்ளனர். பருத்தி விதைத்து ஒரு மாதமான நிலையில் தற்பபோது களை வெட்டும் கருவி கொண்டு களை வெட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இதுகுறித்து பருத்தி விவசாயி ஒருவர் கூறுகையில், 'கடந்த ஆண்டு பருத்தி நல்ல விலைக்கு விலை போனது. அதேபோல் இந்த ஆண்டும் பருத்திக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இதனால் இந்த ஆண்டு அதிகமாக பருத்தி சாகுபடி நடைபெற்றுள்ளது. இந்த பகுதியில் பருத்தி விதைவிதைத்து ஒரு மாதமாகி விட்டது. தற்போது களை வெட்டும் பனிகள் மும்முரமாக நடக்கிறது. அததை தொடர்ந்து உரம் வைத்து பார் அணைக்கும் பணிகளை மேற்கொள்வோம்' என்றார்.


Next Story