கொட்டும் மழையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


கொட்டும் மழையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் கொள்ளிடம் அருகே கொட்டும் மழையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்;

பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் கொள்ளிடம் அருகே கொட்டும் மழையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூரில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு திங்கட்கிழமை தோறும் விவசாயிகள் கொண்டு வரும் பருத்தியை விற்பனை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று ஒழுகுமுறை விற்பனை கூடத்தில் குறைந்த விலைக்கு பருத்தி விற்பனை ஆனதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். பருத்திக்கு குறைந்தபட்சமாக குவின்டாலுக்கு ரூ.6 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுவதாக கூறி விவசாயிகள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோஷம் எழுப்பினர்

அப்போது ஒழுங்குமுறை கூடத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த பருத்தி மூட்டைகள் மழையில் நனைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ள பருத்தி மூட்டைகளுக்கு உரிய பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யாததை கண்டித்தும் பருத்திக்கு அதிகபட்ச விலை நிர்ணயிக்க கோரி விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.அப்போது விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றம் சாட்டினர். ஆா்ப்பாட்டத்தின் போது கடந்த 3 நாட்களுக்கு மேலாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் காத்திருக்கும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என கூறி விவசாயிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story