ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்


ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 1 July 2023 1:05 AM IST (Updated: 1 July 2023 4:26 PM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது.

தஞ்சாவூர்

பாபநாசம்;

தஞ்சாவூர் விற்பனைக்குழு, பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமையில் நடைப்பெற்றது. பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மொத்தம் சராசரியாக 3089.10 குவிண்டால் பருத்தி ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது.

கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், குத்தாலம், சேலம், தேனி பகுதிகளை சார்ந்த 11 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். பருத்தியின் மதிப்பு சராசரியாக 1.76 கோடி ரூபாய் ஆகும். இதில் ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து469-க்கும் குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.5ஆயிரத்து309-க்கும் விலை போனது.


Next Story