ரூ.1½ கோடிக்கு பருத்தி விற்பனை


ரூ.1½ கோடிக்கு பருத்தி விற்பனை
x
தினத்தந்தி 29 Sept 2023 5:28 PM IST (Updated: 7 Oct 2023 10:33 AM IST)
t-max-icont-min-icon

ரூ.1½ கோடிக்கு பருத்தி விற்பனை

திருப்பூர்

மூலனூர்

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 620 பேர் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அவற்றை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும் வந்திருந்து மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7,579-ற்கும், குறைந்தபட்சவிலை ரூ.6,550-ற்கும் விற்பனையானது. அதன்படி ரூ.1 கோடியே 57 லட்சத்து 26 ஆயிரத்து 644-க்கு விற்பனையானது. இந்த தகவலை திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் சுரேஷ் பாபு தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்



Next Story