சங்ககிரி அருகேடாரஸ் லாரியுடன் பஞ்சு லோடு எரிந்து சாம்பல்போலீசார் விசாரணை


சங்ககிரி அருகேடாரஸ் லாரியுடன் பஞ்சு லோடு எரிந்து சாம்பல்போலீசார் விசாரணை
x
சேலம்

சங்ககிரி

ஓமலூர் அருகே ஜாலிகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 35), டாரஸ் லாரி டிரைவர். இவர் மராட்டிய மாநிலத்தில் இருந்து அருப்புக்கோட்டைக்கு பஞ்சு லோடு ஏற்றிக்கொண்டு சங்ககிரி வழியாக நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சென்று கொண்டிருந்தார். சங்ககிரி-ஈரோடு ரோடு தாமஸ் காலனி அருகே சென்றபோது லாரியில் இருந்து தீடீரென கரும்புகை வந்தது. உடனே டாரஸ் லாரி டிரைவர் பிரபு லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பார்த்தபோது பஞ்சு லோடு தீப்பிடித்து எரிந்தது. இதனிடையே லாரி தீப்பற்றி எரியும் தகவல் கிடைத்து, சங்ககிரி தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்மணி தலைமையில் மீட்பு படையினர் விரைந்து சென்று தீயை அனைத்தனர். ஆனால் அதற்குள் லாரியின் பின்பகுதி முழுவதும் தீப்பரவி பஞ்சு முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது. தீப்பற்றி எரிந்த டாரஸ் லாரி மற்றும் தீக்கிரையான பஞ்சின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். லாரியுடைய ஓயர் சர்க்யூட் காரணமாக தீ விபத்து நடந்து இருக்கலாம் எனகூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story