இயற்பியல் மன்ற விழா


இயற்பியல் மன்ற விழா
x

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இயற்பியல் மன்ற விழா நடைபெற்றது.

நாமக்கல்

மோகனூர்

நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் இயற்பியல் துறை சார்பில், இயற்பியல் துறை மன்ற தொடக்க விழா, கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது. இயற்பியல் துறைத் தலைவர் சின்னுசாமி அனைவரையும் வரவேற்றார். விழாவை கல்லூரி முதல்வர் ராஜா தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வேலுச்சாமி, மன்றத்தின் பொறுப்பாளர்களை அறிமுகம் செய்துவைத்தார். இவ்விழாவில், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ஐ.எஸ்.ஆர்.ஓ.) செயற்கைக்கோள் வழிசெலுத்தல் திட்டத்தில் துணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த விஞ்ஞானி இளங்கோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு தன் வாழ்வின் அனுபவத்தையும், பயின்று வந்த சூழலையும், அடைந்த வெற்றியையும், பணியின் பெருமையையும் தான் ஆற்றிய சேவைகளையும் மையமாகக் கொண்டு எதிர்காலத்தில் ஒவ்வொரு மாணவரும் அவரவர் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக சிறப்புரையாற்றினார், மேலும் கல்லூரி மாணவ மாணவியருக்கு "அறிவியல் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை" என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டி நடைபெற்றது. இதில் 5 அணிகள் பங்குபெற்றன. முதல் 3 இடம் பெற்ற அணிகளுக்கு கல்லூரி முதல்வர் நிறைவு விழாவில் சிறப்பு பரிசு வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை துறைத் தலைவர் சின்னுசாமி, பேராசிரியர்கள் செய்திருந்தனர்.


Next Story