நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் போராட்டம்


நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் போராட்டம்
x

விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் தரையில் அமர்ந்து கவுன்சிலர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

விருதுநகர்

விருதுநகர்,

விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் தரையில் அமர்ந்து கவுன்சிலர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

நகராட்சி கூட்டம்

விருதுநகர் நகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டம் நகரசபை தலைவர் மாதவன் தலைமையில் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணைத்தலைவர் தனலட்சுமி, கமிஷனர் லீனாசைமன், என்ஜினீயர் எட்வின் பிரைட் ஜோஸ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் அனைவரும் குடிநீர் வினியோக பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தினர். மேலும் குடிநீர் வினியோக இடைவெளி நாட்களை குறைக்கவும், குடிநீர் குழாய் உடைப்புகளை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

போராட்டம்

நகராட்சி 14-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் ராஜ்குமார் கடந்த பல மாதங்களாக தனது வார்டு பகுதியில் திட்டப்பணிகளை மேற்கொள்ள பல்வேறு கோரிக்கை மனுக்கள் கொடுத்தும், நேரடியாக கேட்டுக்கொண்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து நகராட்சி தலைவர் முன்பு கீழே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவர் வார்டு பகுதி ஆதிதிராவிட மக்கள் அதிகமாக வசிக்கும் நிலையில் வார்டு புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதனைத்தொடர்ந்து அடுத்த கூட்டத்திற்குள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் மாதவன் உறுதியளித்த நிலையில் ராஜ்குமாரின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

சொத்து வரி

தாமதம் சொத்து வரி விதிப்பு, காலி மனை வரி விதிப்பு, பெயர் மாற்றம் ஆகிய பணிகள் மிகவும் தாமதம் ஆவதாக கவுன்சிலர் ஜெயக்குமார் புகார் கூறினார். இதற்கு பதிலளித்த கமிஷனர் லீனா சைமன், கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து நிலுவையில் உள்ளதாகவும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இறப்பு சான்றிதழ் பெறுவதில் உள்ள பிரச்சினைக்கு தீர்வு காண கவுன்சிலர் பால்பாண்டி வலியுறுத்தினார். நகராட்சியின் ஆடு அறுவைக்கூடத்தின் டெண்டர் பிரச்சினையில் ரூ. 3 லட்சத்து 76 ஆயிரத்துக்கு டெண்டர் விடுவதற்கு 12 கவுன்சிலர்கள் மட்டும் ஆட்சேபனை தெரிவித்த நிலையில் தீர்மானம் நிறைவேறியது. மேலும் சாதாரண கூட்டத்தில் 28 தீர்மானங்களும், அவசர கூட்டத்தில் 9 தீர்மானங்களும் விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டன.


Next Story