பஞ்சாயத்து கூட்டத்தில் கவுன்சிலர் திடீர் தர்ணா


பஞ்சாயத்து கூட்டத்தில் கவுன்சிலர் திடீர் தர்ணா
x
தினத்தந்தி 19 Sep 2023 8:54 PM GMT (Updated: 19 Sep 2023 8:55 PM GMT)

நெல்லை ராமையன்பட்டி பஞ்சாயத்து கூட்டத்தில் கவுன்சிலர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருநெல்வேலி

நெல்லை ராமையன்பட்டி பஞ்சாயத்து கூட்டம் அதன் தலைவர் டேவிட் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு துணைத்தலைவர் செல்வகுமார் வராமல் புறக்கணித்துச் சென்றார். இதுதவிர 4-வது வார்டு கவுன்சிலர் மாரியப்ப பாண்டியன் கூட்டத்துக்கு வந்து, அங்கிருந்த அதிகாரியிடம் மனு கொடுத்தார். பின்னர் அவர் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி வெளியே வந்து, அங்குள்ள படிக்கட்டில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'கடந்த 13-ந்தேதி பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் நடந்த அங்கன்வாடி மைய புதிய கட்டிட திறப்பு விழாவுக்கு கவுன்சிலர்களை அழைக்கவில்லை. அந்த பகுதிக்கு சென்றபோது, ஒருமையில் பேசியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சிகள் உதவி இயக்குனரிடம் மனு கொடுத்து உள்ளேன்' என்றார்.


Next Story