திருத்தணி நகராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம்


திருத்தணி நகராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம்
x

திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி தலைமையில் நேற்று நடந்தது.

திருவள்ளூர்

கூட்டத்தில் கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால்வாய் அமைத்து தரவேண்டும், தினசரி குப்பைகள் அள்ள வேண்டும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். கூட்டத்தில் 3 கவுன்சிலர்கள் நகராட்சி அதிகாரிகள் வார்டுகளில் ஆய்வு மேற்கொள்ளும்போது முறையாக தகவல் தெரிவிப்பதில்லை என புகார் தெரிவித்தனர். தொடர்ந்து நகராட்சியில் முதற்கட்டமாக 27 இடங்களில் உள்ள கால்வாய் சீரமைத்தும், புதிய கால்வாய்கள் கட்டுவதற்கு ரூ.4 கோடி தேவை என தீர்மானித்து, அரசு உரிய நிதியுதவி வழங்க வேண்டும் உள்பட 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில், பத்திரிகையாளர்களுக்கு அனுமதிக்கப்பட்டு, தீர்மான நகல்களையும் வழங்குவர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நகராட்சி நிர்வாகம் கவுன்சிலர் கூட்டம் குறித்து நிருபர்களுக்கு தகவல் தெரிவிப்பதும், தீர்மானம் நகல் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. கூட்டம் நடக்கும்போது, புகைப்படம் எடுப்பதற்கு மட்டும் சில நிமிடங்கள் அனுமதிப்பதாகவும் எனவே இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தான் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.


Next Story