வீரவநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்


வீரவநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

வீரவநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு துணைத்தலைவர் உள்ளிட்ட 16 கவுன்சிலர்கள் நேற்று வந்தனர். அவர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட பின்னர் பேரூராட்சி அலுவலகத்தில் தரையில் அமர்ந்து திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பேரூராட்சி பகுதியில் சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தெருவிளக்கு, சாலை போன்ற அடிப்படை வசதிகள் சரிவர செய்யப்படவில்லை என்று கூறி கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், பேரூராட்சி தலைவர், செயல் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து இரவில் துணைத்தலைவர், கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story