கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்


கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

கோயம்புத்தூர்


பொள்ளாச்சி, ஜூன்.1-

பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைவர் வனிதா தலைமை தாங்கினார். கூட்டத்தில் 29 தீர்மானங்கள் வாசிக்கப் பட்டன.

இறுதியாக வரவு, செலவு தீர்மானங்கள் வாசித்த போது கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தலைவர் மற்றும் அவரது ஆதரவு கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததாக தெரிகிறது.

இதை கண்டித்து 7 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், வரவு, செலவு குறித்து கேட்டதற்கு சரியான பதில் அளிக்காமல் தலைவர் கூட்டத்தில் இருந்து வெளியே சென்று விட்டார்.

எனவே மீண்டும் கூட்டம் நடத்தி தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்றனர்.

1 More update

Next Story