பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து நாளை ஆலோசனை முகாம்


பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து நாளை ஆலோசனை முகாம்
x

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்து ஆலோசனை முகாம் அரியலூரில் நாளை (சனிக்கிழமை)நடக்கிறது.

அரியலூர்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அரியலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் நோக்கோடு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து தன்னார்வ இயக்கத்தின் மூலம் ஆலோசனை முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 9.30 மணியளவில் கலெக்டர் அலுவலக பிரதான கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் மாணவ-மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொள்ளலாம், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.


Next Story