பொதுப் பிரிவில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு


பொதுப் பிரிவில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
x
தினத்தந்தி 16 July 2023 1:00 AM IST (Updated: 16 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பொதுப் பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

கோயம்புத்தூர்
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பொதுப் பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.


தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


கலந்தாய்வு


தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டு இளம் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான இணையதள வழி கலந் தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 12-ந் தேதி தொடங் கியது.

7.5 சதவீதம் இடஒதுக்கீட்டின்படி, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.


தொழில்முறைக் கல்வி பாடப்பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.


பொதுப்பிரிவு


பொதுப்பிரிவினருக்கான இணையவழி முதல்கட்ட கலந்தாய்வு நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. இதில் பங்கேற்ப வர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 20-ந்தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடக்கிறது.

பொதுப்பிரிவினருக்கான நகர்வு முறை மற்றும் இணையதள வழி 2-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 26 மற்றும் 27-ந் தேதிகளில் நடக்கிறது.


பொதுப்பிரிவில் இணையதள வழி 2-ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 28 மற்றும் 29-ந்தேதி நடக்கிறது.

கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story