மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்


மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்
x

மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024-ம் ஆண்டிற்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (திங்கட்கிழமை) முதல் நடைபெற உள்ளது. மேலும் அன்று ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தேசிய மாணவர் படை வீரர்கள் முதலான சிறப்பு ஒதுக்கீட்டிற்கும், முதல்கட்ட முதல் சுற்று பொதுக்கலந்தாய்வு வரும் ஜூன் மாதம் 1-ந் தேதி அன்று பி.எஸ்சி. கணிதம் மற்றும் கணினி அறிவியல், 2-ந் தேதி இளங்கலை பி.காம். வணிகவியல், 3-ந் தேதி இளங்கலை பி.ஏ. தமிழ் மற்றும் ஆங்கிலத் துறைகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. மாணவ-மாணவியர் கலந்தாய்வுக்கு குறித்த நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்னதாக கட்டாயம் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவருடன் வருகை தரவேண்டும். கலந்தாய்விற்கு வரும் போது 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான உரிய சான்றிதழ், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்கள்-2, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 4, வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் 2 ஆகிய அனைத்து சான்றிதழ்களும் அசல் மற்றும் நகல்கள் எடுத்து வரவேண்டும். சிறப்பு ஒதுக்கீட்டுக் கலந்தாய்வில் கலந்து கொள்ள அதற்கான சான்றிதழை கட்டாயமாகக் கொண்டு வரவேண்டும். இணையத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் (அனைத்து பக்கங்கள்) 2 நகல்கள் எடுத்து வரவேண்டும்.

கல்விக் கட்டணம் முழுவதும் செலுத்திய பின்பே சேர்க்கை முழுமையடையும், மேலும் விண்ணப்பம் செய்தவர்களின் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கல்லூரி இணையதளமான www.gascjayankondam.ac.in என்ற இணையதளத்தில் காணலாம். முதல்கட்ட 2-ம் சுற்று பொதுக்கலந்தாய்வு 7, 8 மற்றும் 9-ந் தேதி என 3 நாட்கள் நடைபெறும். தரவரிசைப்பட்டியலின் அடிப்படையில் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள அலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கப்படும் அல்லது குறுஞ்செய்தி, வாட்ஸ்-அப் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்ற தகவலை கல்லூரி முதல்வர் (பெறுப்பு) ராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story