இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க ஆலோசனை


இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க ஆலோசனை
x

இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க ஆலோசனை நடத்தப்பட்டது.

வேலூர்

காட்பாடி தாலுகா மேல்பாடி பகுதியில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இநத பள்ளியில் ஒவ்வொரு மாதமும் தமிழக அரசின் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்று வருகின்றது. அதன்படி நேற்று தலைமை ஆசிரியர் ரஜினி தலைமையில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் மேல்பாடி ஊராட்சி மன்ற தலைவர் நித்தியானந்தம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அனுசுயா ரமேஷ் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளி வகுப்பறை வெளிப்புற சுவர்களில் ஓவியம் வரைய ரூ.50 ஆயிரம் நிதியளித்த முன்னாள் மாணவர்கள் குமார் அய்யர் மற்றும் பெருமாள் கவுரவிக்கப்பட்டனர்.

இதில் ஆசிரிய பயிற்றுனர் லெனின், எஸ்.எம்.சி.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஜினிகாந்த் மற்றூம்.பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

விண்ணம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த மேலாண்மை குழு கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் தனலட்சுமி தலைமை தாங்கினார். பள்ளிக்கு வராமல் இடையில் நின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை பள்ளிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுப்பது, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாணவர்களை ஊக்குவிப்பது ஆகியவை பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மீனாட்சி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story