ெதருக்கூத்து கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை
தெருக்கூத்து கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தெருக்கூத்து கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கலவையை அடுத்த கரிக்கந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவர் தெருக்கூத்து நாடக கம்பெனி நடத்தி வருகிறார். தெருக்கூத்து நாடக கம்பெனியில் ஸ்ரீதர் (வயது 26), அருண் (24) ஆகிய 2 மகன்களும் தெருக்கூத்து நாடகத்தில் நடித்து வருகின்றனர்.
நேற்று முன் தினம் சுண்டி வாக்கம் கிராமத்தில் இரவு தெருக்கூத்து நாடகம் நடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளனர் இரவு 10.30 மணி அளவில் 3 பேரும் உறங்க சென்று உள்ளனர் நள்ளிரவில் ஸ்ரீதர் எழுந்து பார்த்தபோது அவரது தம்பி அருண் மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.
ஸ்ரீதர் கூச்சலிடவே தந்தை முனுசாமி அதிர்ச்சியில் எழுந்தார். பின்னர் 3 பேரும் சேர்ந்து அருணை கீழே இறக்கி 108 ஆம்புலன்சை வரவைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர்கள் பரிசோதித்தபோது இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இரண்டு வருடமாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். அடிக்கடி செத்து விடுவேன் என்று அருண் கூறி வந்தார். இந்த நிலையில் வலிப்பு நோயால் அருண் தூக்குப்போட்டுக் கொண்டார் என்று அவர் தந்தை முனுசாமி தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.