பெண்ணை அாிவாளால் வெட்டிய கள்ளக்காதலன் கைது


பெண்ணை அாிவாளால் வெட்டிய கள்ளக்காதலன் கைது
x

தேன்கனிக்கோட்டை அருகேபெண்ணை அாிவாளால் வெட்டிய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கோட்டையூர் கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சின்னமல்லா. இவருடைய மனைவி ருத்ரம்மாள் (வயது 40). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ருத்ரா (38) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. கள்ளத்தொடர்பை கைவிட ருத்ரம்மாள் முடிவு செய்து ருத்ராவிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த ருத்ரா சம்பவத்தன்று ருத்ரம்மாளை அரிவாளால் வெட்டி விட்டு தலைமறைவாகி விட்டார். இது குறித்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ருத்ராவை தேடி வந்தனர். இந்தநிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் தலைமறைவாக இருந்த ருத்ராவை நேற்று கைதுசெய்தனர்.

1 More update

Next Story