கரூரில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது


கரூரில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது
x

கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.

கரூர்

கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 9-ந் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ள க.பரமத்தி, கிருஷ்ணராயபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.இதையொட்டி அந்தந்த அலுவலகங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு மதியம் 2 மணிக்குள் முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story