மதுரையில் நாட்டு இன நாய்கள் கண்காட்சி; 250-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்பு
மதுரையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் 250-க்கும் மேற்பட்ட நாட்டு இன நாய்கள் பங்கேற்றன.
மதுரை,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ கல்லூரி சார்பில் நாட்டு இன நாய் வளர்ப்பு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் 250-க்கும் மேற்பட்ட நாட்டு இன நாய்கள் பங்கேற்றன. இதில் ஆண் நாய்கள் மற்றும் பெண் நாய்களுக்கு என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற நாய்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story