நாட்டுக்கோழி விலை குறைந்தது


நாட்டுக்கோழி விலை குறைந்தது
x

பரமத்திவேலூர் சந்தையில் நாட்டுக் கோழிகளின் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது.

நாமக்கல்

பரமத்திவேலூர்

நாட்டுக்கோழி சந்தை

பரமத்திவேலூரில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழி சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு பரமத்தி வேலூர், மோகனூர், கரூர், நாமக்கல், ஜேடர்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக்கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வருகின்றனர்.

இந்த சந்தைக்கு பெருவடை, கீரி, கடகநாத், அசில், மயில் காகம், கருங்கண் கருங்காலி, கிரிராஜா உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுக்கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வருகின்றனர். இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் நாட்டுக் கோழிகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்து நாட்டுக்கோழிகளை வாங்கிச் செல்கின்றனர்.

விலை குறைந்தது

தரமான நாட்டுக்கோழிகள் கடந்த வாரம் கிலோ ஒன்று ரூ.350 வரையிலும், பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் கிலோ ரூ.250 வரையிலும் விற்பனையானது. நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாட்டுக்கோழி சந்தையில் நாட்டுகோழிகள் கிலோ ரூ.350 வரையிலும், பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் ரூ.200 வரையிலும் விற்பனையானது. வாத்துக்கோழி ஒன்று ரூ.300 வரையிலும் விற்பனையானது.

நாட்டுக்கோழி விலை குறைந்ததால் கோழி வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

1 More update

Next Story