நாட்டு நலப்பணி திட்டம் முகாம்


நாட்டு நலப்பணி திட்டம் முகாம்
x
தினத்தந்தி 8 Oct 2023 12:30 AM IST (Updated: 8 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே நாட்டு நலப்பணி திட்டம் முகாம் நடைபெற்றது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே அரியப்பபுரத்தில் ஆவுடையானூர் புனிதஅருளப்பர் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் மாணவர்களுடன் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க முன்னாள் தலைவரும், பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர் குழு நிறுவனருமான இளங்கோ கண்தான விழிப்புணர்வு குறித்து பேசினார்.

இதில் அரியபுரம் ஊராட்சி துணை தலைவர் சக்தி குமார், வார்டு உறுப்பினர் வசந்தா, ராஜேந்திரன், மாரியம்மாள், முன்னாள் செயலாளர் ரஜினி ஆகியோர் கலந்து கொண்டனர்.



Next Story