வடசித்தூரில் அரசு பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்


வடசித்தூரில் அரசு பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வடசித்தூரில் அரசு பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமம் அருகே வடசித்தூர் அரசு மேல்நிலை பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் வடசித்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. முகாமை வடசித்தூர் அரசு மேல்நிலை பள்ளியின் மூத்த ஆசிரியை பார்வதி தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கு.தேவராசு முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியர் சரவணன் அனைவரையும் வரவேற்றார். இதில் நாட்டு நலத்திட்ட முகாமின் நோக்கம் பற்றி மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. முகாமில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் குழுக்களாக பிரிக்கப்பட்டு ஊர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன் சுத்தம் பேணுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றின் அவசியம் பற்றி விளக்கி கூறினர். மேலும் பள்ளி மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோஷங்கள் எழுப்பி வந்து பள்ளியை வந்தடைந்தனர். இதில் பள்ளி வளர்ச்சி குழு பொன்மலை குமாரசாமி, சுப்பிரமணியம், ஆசிரியை சரண்யா, செந்தில்குமார் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு, பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story