மணிகண்டம் தெற்கு பாகனூர் கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்


மணிகண்டம் தெற்கு பாகனூர் கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
x

மணிகண்டம் தெற்கு பாகனூர் கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.

திருச்சி

மணிகண்டம் தெற்கு பாகனூர் கிராமத்தில் திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது. முகாமில் திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் ரெக்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதில் திட்ட இயக்குனர் விமல், ஆசிரியர்கள் ஜான்சன் விக்டர், சவரிராஜ், ராஜேஷ், லியோ, சரவணன், அன்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். முகாமில் மாணவர்களின் டெங்கு விழிப்புணர்வு நாடகம் மற்றும் சமுதாய விழிப்புணர்வு நடனம் நடந்தது. இதில் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story